உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

Published On 2022-04-15 10:04 GMT   |   Update On 2022-04-15 10:04 GMT
திருச்சியில் தமிழ்நாடு மேல்நிலை வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
திருச்சி:

தமிழ்நாடு மேல்நிலை வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நடந்து முடிந்த ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் எங்களின் வேண்டுகோளை ஏற்று காலியாக உள்ள அனைத்து வேளாண் ஆசிரியர் பணியிடங்களையும் காண்பிக்க வழிவகை செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, கல்வித் துறை ஆணையர் மற்றும் தொழிற்கல்வி இணை இயக்குனருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் எங்களது கோரிக்கையை ஏற்று வேளாண் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு அரசு வேளாண் கல்லூரிகளில் வழங்கி வரும் 5 சதவீத இட ஒதுக்கீட்டை தனியார் கல்லூரிகளிலும் வழங்கி வேளாண் பிரிவு மாணவர்களுக்கு கூடுதலாக  இடங்களை ஏற்படுத்தி கொடுத்த தமிழக முதலமைச்சருக்கு, கல்வித் துறை அமைச்சருக்கு,தொழிற் கல்வி இணை இயக்குனருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

பணி விதிகள் உருவாக்கப்படாமல் உரிய கல்வித்தகுதி இருந்தும்  நீண்ட காலமாக பதவி உயர்வு இல்லாமல் பணியாற்றி வரும் வேளாண் பட்டதாரி ஆசிரியர்களின் தர ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News