ஆன்மிகம்
தஞ்சையில் பச்சைக்காளி-பவளக்காளி புறப்பாடு

தஞ்சையில் பச்சைக்காளி-பவளக்காளி புறப்பாடு

Published On 2021-03-31 08:46 GMT   |   Update On 2021-03-31 08:46 GMT
தஞ்சை மேலவீதி சங்கரநாராயணர் கோவிலில் இருந்து பச்சைக்காளியும், மேலவீதி கொங்கணேஸ்வரர் கோவிலில் இருந்து பவளக்காளியும் புறப்பட்டு வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கியது.
தஞ்சை கோடியம்மன்கோவில் பச்சைக்காளி-பவளக்காளி திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி தஞ்சை மேலவீதி சங்கரநாராயணர் கோவிலில் இருந்து பச்சைக்காளியும், மேலவீதி கொங்கணேஸ்வரர் கோவிலில் இருந்து பவளக்காளியும் புறப்பட்டு வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கியது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு மேலவீதியில் உள்ள ஒரு வீட்டில் பச்சைக்காளி-பவளக்காளிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இரவு 9 மணிக்கு உறவாடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை(வியாழக்கிழமை) பச்சைக்காளி-பவளக்காளிக்கு தஞ்சை தெற்குவீதி, கீழவாசல், கரந்தை பகுதிகளில் பூஜைகள் முடிந்து பின்னர் மேலவீதியில் விடையாற்றி பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை காளியாட்ட உற்சவ கமிட்டியினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News