செய்திகள்
கோப்புப்படம்

தேனியில் நாளை டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

Published On 2019-11-09 10:52 GMT   |   Update On 2019-11-09 10:52 GMT
மிலாடி நபி அன்று தேனி மாவட்டத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மூடி இருக்க வேண்டும் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.
தேனி:

தமிழகத்தில் 10.11.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மிலாடி நபி தினத்தை முன்னிட்டு அனைத்து வகையான மதுபான கடைகளும் மூடியிருக்க வேண்டும் என்றும், அன்றைய தினத்தில் எவ்வித மதுபான விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதனடிப்படையில் 10.11.2019-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிலாடி நபி அன்று தேனி மாவட்டத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மூடி இருக்க வேண்டும்.

அதுபோல மதுபான பார்களான (எப்.எல்-1), மனமகிழ் மன்றங்களுடன் இணைந்த மதுக்கூடங்கள் (எப்.எல்-2), தங்கும் விடுதிகளுடன் அல்லது ஹோட்டல்களுடன் இணைந்த மதுபான கூடங்கள் (எப்.எல்-3), தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் மற்றும் அதன் முகவர்களால் நடத்தப்படும் ஹோட்டல்கள் (எப்.எல்-3 யு, எப்.எல்-3 யுயு, எப்.எல்-4 யு) மற்றும் அயல்நாட்டு மதுபானங்கள் சில்லரை விற்பனை செய்யப்பட உரிமம் பெற்ற கடைகள் (எப்.எல்-11) ஆகியவைகள் கட்டாயம் மூடப்படவேண்டும். மேலும் மிலாடி நபி தினத்தில் ஏதேனும் விதிமீறல்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட மதுபானக்கடைகள் மற்றும் உரிமதாரர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News