தோஷ பரிகாரங்கள்
முருகன்

முருகனுக்கு செய்யும் காணிக்கைகளும்...பலன்களும்...

Published On 2022-03-19 05:12 GMT   |   Update On 2022-03-19 05:12 GMT
பழனி பகுதியை ஆண்ட மன்னர்கள் முருகப்பெருமானுக்காக இடைவிடாது பூஜைகள் பல செய்தும், நிலங்களை தானமாகவும் வழங்கினர். இதனை கல்வெட்டுகள் விளக்குகின்றன.
முருக பக்தர்கள் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்களில் வேண்டுதலோடு காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னரும் முருகனை வழிபட்டு உண்டியலில் பக்தியோடும், மகிழ்ச்சியோடும் காணிக்கைகளை செலுத்துகின்றனர். இதனால் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன. காணிக்கைகளை அளிப்பதால் செல்வம் பெருகும், சேவல், புறா போன்ற பறவைகளை காணிக்கையாக செலுத்துவதால் நோய்கள், பில்லி, சூனியம், தரித்திரம் உள்ளிட்ட தீய வினைகள் நீங்கி ஆயுள் பெருகும்.

விவசாயிகள் தங்கள் உழவு செழிக்க வேண்டும் என்பதற்காக பசு, எருது போன்றவற்றையும் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். இதனால் வேளாண்மை செழிப்பதோடு, குடும்ப கஷ்டங்கள் விலகி தொழிலில் உற்பத்தி பெருகும். அதேபோல் முருகன் கோவிலில் அன்னதானம் என்பது சிறப்பாக நடைபெற்று வருகிறது. அன்னதானம் செய்வதால் ஆயுள் பெருகும், குடும்பத்தில் முருகப்பெருமானே ஆண் குழந்தையாக பிறப்பான் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பழனி பகுதியை ஆண்ட மன்னர்கள் முருகப்பெருமானுக்காக இடைவிடாது பூஜைகள் பல செய்தும், நிலங்களை தானமாகவும் வழங்கினர். இதனை கல்வெட்டுகள் விளக்குகின்றன. நிலங்களை காணிக்கையாக தானம் செய்வதால் தலைமுறைகள் சிறக்கும்.

ஜே.பி.சரவணன், தலைவர் பழனி நகர அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு.
Tags:    

Similar News