செய்திகள்
செரீனா வில்லியம்ஸ்

2017-க்குப்பின் முதன்முறையாக கோப்பையை வென்ற செரீனா வில்லியம்ஸ்

Published On 2020-01-12 10:31 GMT   |   Update On 2020-01-12 10:31 GMT
அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 2017 ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு தற்போதுதான் இறுதிப் போட்டியில் வெற்றி வாகை சூடியுள்ளார்.
அமெரிக்காவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனை வென்றார். அதன்பின் கர்ப்பிணியாக இருந்ததால் டென்னிஸில் இருந்து விலகியிருந்தார்.

குழந்தை பெற்றபின் தீவிர பயிற்சி மேற்கொண்டு மீண்டும் டென்னிஸில் ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் முக்கியமான சில தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

ஆனால் அவரால் கோப்பையை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில்தான் ஆக்லாந்து கிளாசிக் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப் போட்டியில் ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்டார். இதில் 6-3, 6-4 என நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன்மூலம் 2017-க்குப்பின் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதில் கிடைத்த பரிசுத் தொகையை ஆஸ்திரேலியா காட்டுத்தீ நிவாரணத்திற்கு வழங்கியுள்ளார்.
Tags:    

Similar News