தொழில்நுட்பச் செய்திகள்
ஆப்பிள் வாட்ச் ஈசிஜி

உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்- நன்றி கூறிய பெண்ணிடம் ஆப்பிள் சி.இ.ஓ என்ன கூறினார் தெரியுமா?

Published On 2022-03-21 06:39 GMT   |   Update On 2022-03-21 06:39 GMT
தனது கணவரின் உயிரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றியதாக ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக்கிற்கு பெண் ஒருவர் கடிதம் எழுதிய நிலையில், அவருக்கு பதில் அளித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் இன்று உலகம் முழுவதும் பெரும் அளவில் பயன்பட்டு வருகிறது. குறிப்பாக ஆரோக்கிய வாழ்க்கைமுறையை மேற்கொள்பவர்களுக்கு ஆப்பிள் வாட்சின் பல அம்சங்கள் உதவியாக இருக்கிறது.

இந்நிலையில் ஆப்பிள் வாட்ச் ஹரியானாவில் மருத்துவர் ஒருவருடைய உயிரையே காப்பாற்றியுள்ளது.

ஹரியானா மாநிலம் யமுனா நகரில் பல் மருத்துவராக பணியாற்றி வரும் நிதிஷ் சோப்ரா ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6-ஐ கடந்த ஒரு வருடமாக பயன்படுத்தி வந்துள்ளார். 

சமீபத்தில் அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நிதிஷ் சோப்ராவின் மனைவி ஆப்பிள் வாட்சை கொண்டு ஈ.சி.ஜி பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில் இதைய துடிப்பில் சில தடுமாற்றங்கள் இருப்பதை அறிந்த அவர் உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே அவருக்கு பரிசோதனை செய்ததில் இதையத்தில் 99.9 அடைப்பு இருந்தது தெரிய வந்துள்ளது. இதன்பின் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சோப்ரா காப்பாற்றப்பட்டார். 

இதையடுத்து சோப்ராவின் மனைவி ஆப்பிள் தலைமை செயலதிகாரி டிம் குக்கிற்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதற்கு பதில் அளித்த டிக் குக், “நீங்கள் சரியான நேரத்தில் மருத்துவ உதவியை நாடியதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ஆரோக்கியமாக இருங்கள். நன்றி” என பதிலளித்துள்ளார்.
Tags:    

Similar News