தொழில்நுட்பம்

விரைவில் இந்தியா வரும் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன்

Published On 2019-06-09 08:09 GMT   |   Update On 2019-06-09 08:09 GMT
சியோமி நிறுவனம் தனது ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது.



சியோமியின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. சியோமியின் Mi மிக்ஸ் 3 5ஜி அந்நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டது.

ஸ்மார்ட்போன் சந்தையில் மிக குறைந்த காலக்கட்டத்தில் பிரபலமான ரெட்மி மற்றும் ரியல்மி பிராண்டுகள் தங்களது 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளன. ரியல்மி தனது 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி சமீபத்தில் அறிவித்த நிலையில், ரெட்மி தனது 5ஜி ஸ்மார்ட்போன் உருவாகி வருவதாக தெரிவித்துள்ளது.

சியோமியின் செய்தி தொடர்பாளர் டொனோவன் சங் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். ரெட்மி 5ஜி போன் பற்றி அதிகளவு விவரங்களை அவர் வழங்கவில்லை. அந்த வகையில் ரெட்மி 5ஜி போனின் பெயர் அறியப்படவில்லை. ரியல்மி இந்தியாயின் தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் ரியல்மி 5ஜி போன் இந்த ஆண்டு அறிமுகமாகும் என தெரிவித்தார்.



இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனினை மிக விரைவில் அறிமுகம் செய்ய முயற்சிப்பதாக ரியல்மி தெரிவித்துள்ளது.

இதனிடையே சியோமி நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனான Mi மிக்ஸ் 3 5ஜி மாடலை இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. சிறப்பம்சங்களை பொருத்தவரை சியோமி Mi மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், ஸ்னார்டிராகன் X50 மோடெம் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 6.39 இன்ச் FHD பிளஸ் 2340x1080 பிக்சல் சாம்சங் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. ஏ.ஐ. டூயல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சோனியின் IMX586 சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் கேமரா சார்ந்து இயங்கும் பல்வேறு ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News