செய்திகள்
தீ விபத்து

மால்டா பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து- பலி எண்ணிக்கை 6 ஆனது

Published On 2020-11-19 19:57 GMT   |   Update On 2020-11-19 19:57 GMT
மேற்கு வங்காளத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் மால்டா நகரில் இயங்கி வரும் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று முற்பகல் திடீரென வெடிச்சத்தம் கேட்டது. தொடர்ந்து அங்கு தீ விபத்தும் ஏற்பட்டது. 

தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். காயமடைந்தவர்கள் மால்டா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மால்டா பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் மாநில கவர்னர் ஜகதீப் தங்கார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
Tags:    

Similar News