செய்திகள்
கோப்புப்படம்

மாநிலங்களுக்கு மேலும் 7 லட்சம் தடுப்பூசி - மத்திய அரசு வழங்குகிறது

Published On 2021-05-11 18:58 GMT   |   Update On 2021-05-11 18:58 GMT
நாட்டில் உள்ள மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரை 18 கோடியே 3 ஆயிரத்து 160 தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்துப்பட்டுள்ளது. கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

நாட்டில் உள்ள மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரை 18 கோடியே 3 ஆயிரத்து 160 தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி உள்ளது. 17 கோடியே 9 லட்சத்து 71 ஆயிரத்து 429 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.



மாநிலங்களிடம் கையிருப்பாக 90 லட்சத்து 31 ஆயிரத்து 691 தடுப்பூசி டோஸ்கள் இருக்கின்றன. இந்த நிலையில் வரும் 3 நாட்களில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு 7 லட்சத்து 29 ஆயிரத்து 610 தடுப்பூசிகளை வழங்கும்.

இதை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News