தமிழ்நாடு
செல்வராஜ் எம்.எல்.ஏ.,

திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜூக்கு கொரோனா

Published On 2022-01-15 09:31 GMT   |   Update On 2022-01-15 09:34 GMT
அரசு விழாக்கள் மற்றும் கட்சி விழாக்களில் கடந்த 2 நாட்கள் பங்கேற்றதால், தன்னுடன் பணியாற்றியவர்களை கொரோனா பரிசோதனை செய்யு மாறும் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பூர்:

கொரோனா 3-வது அலை தற்போது தமிழகத்தில் பரவதொடங்கியுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு மற்றும் மற்ற நாட்களில் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.இந்நிலையில் திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏவான கே.என்.விஜயகுமாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் திருப்பூர் தெற்கு  தொகுதி தி.மு.க. எம்.எல்.வாக இருந்து வருபவர் செல்வராஜ் (வயது 65 ). இவர் திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜ் எம்.எல்.ஏவிற்கு சளி மற்றும் இருமல் இருந்தது. 

இதன் காரணமாக சந்தேகமடைந்த அவர் திருப்பூர் அவினாசி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிவுகள் வரும் வரை தன்னை அவர் தனிமைப் படுத்திக் கொண்டார். இதற்கிடையே இந்த பரிசோதனை முடிவுகள்  வந்தது. 

இதில் செல்வராஜ் எம்.எல்.ஏ.விற்கு  கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், செல்வராஜ் எம்.எல்.ஏ. அரசு விழாக்கள் மற்றும் கட்சி விழாக்களில் கடந்த 2 நாட்கள் பங்கேற்றதால், தன்னுடன் பணியாற்றியவர்களை கொரோனா பரிசோதனை செய்யு மாறும் அறிவுறுத்தியுள்ளார். 

இதற்கிடையே தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு நல உதவி வழங்கிய எம்.எல்.ஏ.வுக்கு  கொரோனா உறுதியானதை தொடர்ந்து அந்த விழாவில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் தெற்கு தாலுகாவைச் சேர்ந்த மூன்று துணை தாசில்தார் களுக்கு தோற்று உறுதியானது. தலைமையிடத்து துணை தாசில்தார் சுந்தரமூர்த்தி, மண்டல துணை தாசில்தார் அருள்குமார், வட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் ஆகியோருக்கு உறுதியானது.

Tags:    

Similar News