உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

நாகர்கோவிலில் புழுதி பறக்கும் சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

Published On 2022-05-05 09:19 GMT   |   Update On 2022-05-05 09:19 GMT
நாகர்கோவிலில் புழுதி பறக்கும் சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. பிரதான சாலையாக கருதப்படும் கோட்டார் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து தற்பொழுது ஜல்லிகள் போட்டு சாலை சீரமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையில் போடப்பட்டுள்ள ஜல்லி மற்றும் மணலில் இருந்து அதிகளவு புழுதி கிளம்புகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். 

மேலும் புழுதி பறப்ப தால் அந்த பகுதியில் உள்ள வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள கடைகள் முழுவதும் புழு திக்காடாக காட்சி யளிக்கிறது. திண்பண்டங்களை வெளியே வைக்க முடிவில்லை. அதோடு வாகனதை சிறிது நேரம் வெளியே நிறுத்தினாலும் வாகனம் முழுவதும் புழுதி படிந்துவிடுகிறது. 

எனவே பிரதான சாலையாக கருதப்படும் கோட்டார் சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், வியாபாரிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். இது மட்டுமின்றி தற்போது செட்டிகுளத்தில் இருந்து வேப்பமூடு செல்லும் சாலையிலும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. 

அந்த வழியாக செல்லும் பஸ்கள் அனைத்தும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விடப்பட்டுள்ளதால் செட்டிகுளம் கலெக்டர் அலுவலகம் சாலையில் தினமும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதே போல இன்று காலையிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடியில் வாகன ஓட்டிகள் சிக்கித்தவித்தனர். 

போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் செட்டிகுளம்- வேப்பமூடு சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த சாலையில் பாதாள சாக்கடை பணிகள் முழு மையாக நிறைவு பெறாத நிலையில் வாகனங்கள் சென்று வருகின்றன. 

இதனால் அந்த பகுதியி லும் அதிகளவு புழுதி பறக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை வைத்து உள்ளனர்.
Tags:    

Similar News