செய்திகள்
குளத்திற்குள் கவிழ்ந்து கிடக்கும் கார்.

குளத்திற்குள் கார் பாய்ந்தது- என்ஜினீயர் பலி

Published On 2019-10-20 14:51 GMT   |   Update On 2019-10-20 14:51 GMT
குளச்சலில் குளத்திற்குள் தலைகீழாக கார் பாய்ந்ததில் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகர்கோவில்:

குளச்சல் மாதா காலனியைச் சேர்ந்தவர் மரிய விஜிலிஸ், (வயது 42). வெளிநாட்டில் உள்ள ஆயில் நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். இவரது மனைவி ஹெப்சி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ஹெப்சி குழந்தைகளுடன் கேரள விழிஞ்ஞத்தில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தார். மனைவி, குழந்தைகளை அழைப்பதற்காக மரிய விஜிலிஸ் நேற்றிரவு காரில் விழிஞ்ஞத்திற்கு புறப்பட்டார். கொல்லங்கோடு அருகே கிராத்தூர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது மரிய விஜிலிஸ் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டில் தாறுமாறாக ஓடியது. ரோட்டோரத்தில் இருந்த சுவர் ஒன்றின் மீது மோதி, குளத்திற்குள் தலைகீழாக பாய்ந்தது. காரில் இருந்து வெளியே வரமுடியாமல் மரிய விஜிலிஸ் தவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் குளத்திற்குள் இறங்கி காருக்குள் சிக்கி இருந்த மரிய விஜிலிசை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மரிய விஜிலிஸ் சீட் பெல்ட்டும் அணிந்திருந்தார். இதனால் காரின் கதவை உடைத்து மீட்கும் முயற்சியில் இறங்கினார்கள். அரைமணி நேரத்திற்கு பிறகு மரிய விஜிலிசை கரைக்கு கொண்டு வந்தனர். மயக்க நிலையில் இருந்த அவரை ஆஸ்பத்திரி ஒன்றிற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.
Tags:    

Similar News