லைஃப்ஸ்டைல்
பாதுகாப்பாக கண்களை அழகுபடுத்தி பராமரிப்பது எப்படி?

பாதுகாப்பாக கண்களை அழகுபடுத்தி பராமரிப்பது எப்படி?

Published On 2020-01-23 03:13 GMT   |   Update On 2020-01-23 03:13 GMT
காஜல், மஸ்காரா, கணமை, ஐ லைனர் போன்ற அழகு சாதனப் பொருள்களில் உள்ள ரசாயனங்கள் கண்களை பாதிக்காமல் பாதுகாப்பது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
தற்போது கண்களை அழகுபடுத்த காஜல், மஸ்காரா, கண்மை, ஐ லைனர் என்று எத்தனையோ அழகு சாதனப்பொருள்கள் வந்துவிட்டன. இவற்றில் உள்ள ரசாயனப் பொருள்களைக் கணக்கிட்டோம் என்றால் தலை சுற்றி மயக்கமே வந்துவிடும்! இவற்றைத் தவிர்த்தும் கண்களை அலங்கரிக்க முடியாது.

வெளியில் செல்லும்போது இவற்றைப் பயன்படுத்தி கண்களை அலங்கரித்துக்கொள்ளலாம். ஆனால், இரவு தூங்கச் செல்லும் முன் கண்களை முழுவதுமாகத் தண்ணீரால் கழுவிவிட வேண்டும். இதனால் காஜல், மஸ்காரா, கண் மை, ஐ லைனர் போன்றவற்றால் கண்களில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கலாம்

இப்போது கடைகளில் நிறைய மேக்-அப் ரிமூவர்கள் திரவ வடிவத்திலேயே கிடைக்கின்றன. இதில் சில துளிகளை சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தையும், கண்களையும் லேசாகத் துடைத்தாலே போதும், செய்திருந்த அலங்காரங்கள் கலைந்துவிடும். விளக்கெண்ணையையும் மேக்-அப் ரிமூவராகப் பயன்படுத்தலாம். பிறகு தண்ணீரில் முகத்தைக் கழுவிய பின்பு தூங்கச் செல்லலாம். இவ்வாறில்லாமல், கண்களில் அப்ளை செய்த மையை ரிமூவ் செய்யாமலேயே தூங்கச்சென்றுவிட்டால் கருவளையம், கண்களில் தொற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
Tags:    

Similar News