வழிபாடு
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

Published On 2022-02-16 08:08 GMT   |   Update On 2022-02-16 08:08 GMT
திருப்பதி சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருகிற 20-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
திருப்பதி அருகே உள்ள சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருகிற 20-ந் தேதி முதல் 28-ந் தேதிவரை பிரம்மோற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் சுப்ரபாதத்தில் சுவாமி எழுந்தருளி தோமாலசேவை, கொலுவு நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. கோவில் வளாகம், மதில் சுவர், கூரை, பூஜைப் பொருட்கள் போன்றவற்றை நீரினால் சுத்தப்படுத்திய பின், நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம் போன்ற வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. பின்னர் சர்வ தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் கோவில் இணை நிர்வாக அதிகாரி வீரபிரம்மன், துணை அதிகாரி சாந்தி, உதவி அதிகாரி தனஞ்செயுடு, கண்காணிப்பாளர்கள் ரமணய்யா, செங்கல்ராயிலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News