செய்திகள்
விராட் கோலி

டி20 உலக கோப்பையில் கோலியின் கவனம் எதில் இருக்கும்? - சொல்கிறார் இளவயது பயிற்சியாளர்

Published On 2021-09-18 21:10 GMT   |   Update On 2021-09-18 21:10 GMT
இந்தியாவுக்கு இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்று கொடுக்கவில்லை என்ற விமர்சனம் கேப்டன் விராட் கோலி மீது வைக்கப்படுகிறது.
புதுடெல்லி:

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ஆனாலும், இந்தியாவுக்கு இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்று கொடுக்கவில்லை. விராட் கோலி கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக பேட்டிங்கில் சோபிக்க முடியாமல் திணறி வருகிறார்.

இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கு பிறகு டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என விராட் கோலி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அவரால் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த முடியும் என்று அவரது சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பேசிய ராஜ்குமார் ஷர்மா, டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதன் மூலம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரால் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.

புதிய கேப்டன் புதிய யோசனைகளைக் கொண்டு வருவார். இந்திய கேப்டனுக்கு எம்எஸ் தோனி உதவி செய்வதுபோல் கோலி அவருக்கு உதவுவார். டி20 உலகக் கோப்பையை வெல்வதில் கோலி அதிக உறுதி, கவனத்துடன் இருப்பார்.

இது ஒரு சிந்தனைக்குரிய முடிவு. இதைப் பற்றி அவர் என்னுடன் விவாதித்தார். மூன்று வடிவங்களில் கேப்டன் செய்வது ஒரு வீரரை அழுத்தத்தில் ஆழ்த்துகிறது. அதனால் அவர் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்தார். இது ஒரு பெரிய பிரச்சினை என்பதால் நாங்கள் அதைப்பற்றி விவாதித்தோம் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News