செய்திகள்
முத்தூர் ஆரோக்கிய பூங்கா பணியினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

முத்தூர் ஆரோக்கிய பூங்கா 90 சதவீதம் நிறைவு - அதிகாரிகள் தகவல்

Published On 2021-10-24 07:59 GMT   |   Update On 2021-10-24 07:59 GMT
660 நிலையான முகாம்கள், 82 நடமாடும் முகாம்கள் என 742 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகின்றன.
வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர்  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அமைச்சர்  மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: -

மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பல்வேறு கட்ட முகாம்கள் மூலம் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 19,95, 300 பேர் உள்ளனர் . இதுவரை 16,11,219 பேருக்கு முதல் தவணையும், 4,97,121 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 

மேலும் 3,84,081பேருக்கு முதல் தவணையும் 1,81,551 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட வேண்டியுள்ளது. தற்போது ஒரு லட்சம் தடுப்பூசிகள் தயார்  நிலையில் உள்ளன.

660 நிலையான முகாம்கள், 82 நடமாடும் முகாம்கள் என 742 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுங்கச்சாவடிகள், தனியார் மருத்துவமனைகள் ஆகிய இடங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

ஆகவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார் .

இதனிடையே முத்தூரில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், ஆரோக்கிய பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. 

இதனை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு செய்தார். பூங்கா பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  
Tags:    

Similar News