செய்திகள்
வீதியில் டெங்கு கொசு மருந்து அடிக்கப்பட்ட போது எடுத்த படம்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் ஓட்டு போட்டனர்

Published On 2021-03-27 18:02 GMT   |   Update On 2021-03-27 18:02 GMT
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கோவையில் டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் உஷாராக இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பாதிப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு படிபடியாக உயர்ந்து உச்சத்துக்கு சென்ற கொரோனா இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்தது. ஆனால் தற்போது கோவையில் கொரோனா வைரஸ் மீண்டும் தலை தூக்கு மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்குதலுக்கு தினமும் 150 பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள்.

இந்தநிலையில் கொரோனாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கோவையில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. கோவையை அடுத்த போத்தனூர் மாரியப்பகோனார் வீதியில் உள்ள ஒரு சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது. இதையடுத்து அந்த சிறுவன் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

இதையடுத்து டெங்கு காய்ச்சல் ஏடிஸ் கொசு மூலம் பரவுவதால் அந்த சிறுவன் வசித்து வந்த வீடு மற்றும் வீதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, புகை தெளிப்பான் கருவி மூலம் கொசு ஒழிப்பு மருந்து புகை அடிக்கும் பணி நேற்று காலை நடைபெற்றது. இதுபோன்று கோவையில் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது.

பொதுவாக மழை காலங்களில் தான் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகளவு இருக்கும். ஆனால் தற்போது வெயில் காலத்திலும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சலும் சேர்ந்து பரவி வருவதால் பொதுமக்கள் உஷாராக இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

டெங்கு காய்ச்சலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தப்பிப்பது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சலானது ஏடிஸ் என்ற கொசுக்கள் மூலமாக பரவுகிறது. இந்த கொசு கடித்த 4 முதல் 7 நாட்களுக்குள் அதிக காய்ச்சல் வெளிப்படும். ஆரம்ப கட்டத்தில் டெங்கு காய்ச்சலை கண்டறிவது கடினம். சாதாரணமாக ஆரம்பிக்கும் காய்ச்சல் அதிகரித்துக்கொண்டே சென்றால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் ரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். இதனால் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ரத்த பரிசோதனை மேற்கொண்டு ரத்த அணுக்களின் அளவு போதுமானதாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

டெங்கு காய்ச்சல் பரவலை தவிர்க்க சரியான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்கு கொசுக்கள் வீட்டின் உட்புற பகுதிகள், வீட்டை சுற்றியுள்ள நீர் நிலைகளில்தான் இனப்பெருக்கம் செய்யும். அதனால் வீட்டையும், சுற்றுப்புற பகுதிகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் கொசு கடியில் இருந்து தப்பிக்க படுக்கை அறையில் உள்ள ஜன்னல்களில் கொசுவலைகளை பயன்படுத்துவது நல்லது. மேலும் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் பின்பற்றி உஷாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News