செய்திகள்
அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிக்காக அமைக்கப்பட்டுள்ள நீருந்து நிலையம்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் 85 சதவீதம் நிறைவு

Published On 2021-09-12 09:14 GMT   |   Update On 2021-09-12 09:14 GMT
தற்போது 3 மாவட்டங்களிலும் நீர் நிலைகளை இணைக்கும் வகையில் குழாய் பதிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன
திருப்பூர்:

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி  திட்டத்திற்கு திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் அப்போதைய முதல்வர் கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.1756.88 கோடி மதிப்பீட்டில்  அத்திக்கடவு - அவிநாசி பாசனம், நிலத்தடி நீர் செறிவு மற்றும் குடிநீர் வழங்கும் வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது.  

ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் அணைக்கட்டுக்கு கீழே 200 மீட்டர் தொலைவில் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து ஈரோடு, திருப்பூர்,கோவை மாவட்டங்களில் வறட்சி பகுதிகளில் உள்ள 1045 குளம், குட்டைகளுக்கு முதல் கட்டமாக நீர் நிரப்பும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3  மாவட்டங்களை சேர்ந்த 50 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது 3 மாவட்டங்களிலும் நீர் நிலைகளை இணைக்கும் வகையில் குழாய் பதிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மொத்தமாக 1058 கி.மீ. தூரத்திற்கு குழாய் பதிக்கப்படுகிறது. பிரதான குழாய் 105 கி.மீ., தூரத்திற்கும், கிளை குழாய்கள் 953 கி.மீ., தூரத்திற்கும் பதிக்கப்படுகின்றன.

தற்போது இத்திட்டப் பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்று விட்டன. இதுகுறித்து கண்காணிப்பு பொறியாளர்  சிவலிங்கம் கூறுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டத்தின் முழு விவரங்களை கேட்டறிந்தார். திட்டத்திற்கான முழு நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வாரந்தோறும் திட்டத்தின் நிலவரம் குறித்து கேட்டறிந்து வருகிறார். 

வருகிற டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முழுவதுமாக முடித்து 2022-ம் ஆண்டு ஜனவரியில் வெள்ளோட்டம்  நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.  
Tags:    

Similar News