ஆன்மிகம்
கோவை சங்கனூரில் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா

கோவை சங்கனூரில் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா

Published On 2021-10-15 05:38 GMT   |   Update On 2021-10-15 05:38 GMT
திருவிழாவையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காளி, சுடலை, விநாயகர், அனுமார் உள்ளிட்ட சாமி வேடம் அணிந்து தசரா காளி ஆட்டம் ஆடினார்கள்.
கோவை சங்கனூர்-நல்லாம்பாளையம் ரோடு அன்னியப்பன் வீதியில் புகழ்பெற்ற ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டிற்கான தசரா திருவிழா கடந்த 5-ந் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இந்த விழா நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது.

இந்த திருவிழாவையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காளி, சுடலை, விநாயகர், அனுமார் உள்ளிட்ட சாமி வேடம் அணிந்து தசரா காளி ஆட்டம் ஆடினார்கள். பின்னர் அவர்கள் வீதி வீதியாக சென்று பொதுமக்கள் முன்னிலையில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். முன்னதாக அம்மனுக்கு அபிஷேக பூஜையும், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News