பைக்
பைக்குகள்

பைக் மைலேஜ்ஜை அதிகரிக்க எளிமையான 10 டிப்ஸ்..

Published On 2022-03-05 09:54 GMT   |   Update On 2022-03-05 09:54 GMT
எரிபொருளை சிக்கனம் செய்வதற்கு நாம் பைக்கை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.
இன்று பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் பணத்தை சிக்கனம் செய்ய அதிக மைலேஜ் தரும் பைக்குகளை அனைவரும் தேடி வருகின்றனர். அதேபோல் ஒவ்வொரு பைக்கும் அதிகபட்சமான மைலேஜ் தருவதற்கு நாம் பைக்கை சரியாக பராமரிக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதையடுத்து அதிக மைலேஜ் பெறுவதற்கு பைக்கை எப்படி பராமரிப்பது என்பதை பார்க்கலாம்.

1) உங்கள் பைக்கை சரியான இடைவெளியில் சர்வீஸ் விடுவது அவசியம். இது இன்ஜின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதோடு, பைக்கின் வாழ்நாளையும் நீட்டிக்கிறது. இதனால் நமது பைக்கின் மைலேஜும் அதிகரிக்கிறது. அதேபோல இன்ஜின் ஆயிலையும் சரியான நேரத்தில் மாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

2) நாம் சரியாக சர்வீஸ் செய்தும் மைலேஜ் அதிகரிக்கவில்லை என்றால் பைக்கின் கார்புரேட்டர் செட்டிங்கை பரிசோதிக்க வேண்டும். கார்புரேட்டரை ரீடியூன் செய்வது இன்ஜின் செயல்திறனை அதிகரிக்கும். அதனால் மைலேஜும் அதிகரிக்கும்.

3) ஒவ்வொரு பைக்கிற்கும் டயர் பிரஷர் வேறுபடும். டயர் பிரஷரை அவ்வபோது சோதனை செய்வது இன்ஜினை சரியாக பராமரித்து, பெட்ரோலை அதிகம் வீணாகாமல் தடுக்கும்.

4) கலப்படம் இல்லாத நல்ல எரிபொருளை பயன்படுத்த வேண்டும். லெட் கலந்த பெட்ரோலை பயன்படுத்தாமல், லெட் இல்லாத தரமான பெட்ரோலை பயன்படுத்துவது இன்ஜின் செயல்திறனை அதிகரிக்கும்.

5) பைக்கை சரியான முறையில் ஓட்ட வேண்டும். குண்டு, குழிகளில் ஏற்றி செல்வது. திடீரென்று பிரேக் பிடிப்பது நமது பைக்கின் இன்ஜின் நலனை பாதிக்கும். இதனால் போக போக பைக் மைலேஜ் குறையத் தொடங்கிவிடும்.



6) பைக்கை அதிவேகமாக ஓட்டாமல் எகானாமியில் ஓட்டுவது நல்லது. சராசரியாக மணிக்கு 40 கி.மீ வேகத்திற்கு ஓட்டுவது பைக் மைலேஜ்ஜை அதிகரிக்கும்.

7) டிராஃபிக்கில் நிற்கும்போது பைக்கை அணைத்து விடுவது நல்லது. இது இன்ஜின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், எரிபொருள் சிக்கனத்தையும் ஏற்படுத்தும்.

8) வெயிலில் பைக்கை நிறுத்துவதை தவிர்க்கவும். இதனால் எரிபொருள் ஆவியாவதால் மைலேஜ் குறைய வாய்ப்புள்ளது. எப்போதும் பைக்கை நிழலில் நிறுத்துவது நல்லது.

9) அவ்வபோது நமது பைக்கை நீரில் கழுவி சுத்தம் செய்து வைப்பது நல்லது. அதேபோன்று பைக் செயினையும் காய விடாமல் சரியாக பராமரிக்க வேண்டும். இதனால் தூசு, மண் போன்றவை செயினில் புகுந்து ஆற்றலை குறைக்காது.

10) கூடுதலான அம்சங்களை பைக்கில் சேர்ப்பதும் மைலேஜ்ஜை குறைக்கலாம். ஒரு பைக்கில் கொடுக்கப்படும் பாகங்கள் அனைத்தும் ஒத்திசைவாக இன்ஜினுடன் இணைந்து செயல்படுவதற்கு உதவும். நாம் பைக்கின் பாகங்களை மாற்றிகொண்டிருப்பதும் கூட எரிபொருள் பயன்பாட்டில் மாற்றத்தை தரலாம்.
Tags:    

Similar News