செய்திகள்
வைகை அணை

மீண்டும் 50 அடியை நெருங்கும் வைகை அணை நீர்மட்டம்

Published On 2020-11-15 05:40 GMT   |   Update On 2020-11-15 05:40 GMT
பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் 50 அடியை நெருங்கி உள்ளது.
கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் 60 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து மதுரை, மேலூர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதி பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

மழையும் நின்றதால் அணையின் நீர்மட்டம் 48 அடி வரை குறைந்தது. தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழைபெய்து வருகிறது. தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் மழைப்பொழிவால் பாசனத்திற்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது.

இதனால் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்பட்டது.

அணைக்கு 965 கன அடி நீர் வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 49.80 அடியாக உள்ளது. விரைவாக 50 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.45 அடியாக உள்ளது. 834 கன அடி நீர் வருகிறது. 1167 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52.35 அடியாக உள்ளது. 11 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி. வருகிற 30 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. கூடலூர் 3.4, உத்தபாளையம் 1 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News