செய்திகள்
கோப்புபடம்

பழனியில், போலீசாரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்

Published On 2020-12-07 14:15 GMT   |   Update On 2020-12-07 14:15 GMT
பழனியில், போலீசாரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
பழனி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பழனியில் நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் உருவ படங்கள் மற்றும் வேளாண் சட்ட திருத்த நகலை கம்யூனிஸ்டு கட்சியினர் தீயிட்டு எரித்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பழனி டவுன் போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதில் அவர்கள் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசாரின் இந்த செயலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பழனி பஸ் நிலையம் முன்பு நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News