ஆட்டோமொபைல்
கின்னஸ் உலக சாதனை படைத்த கார்

37 ஆயிரம் எல்இடி லைட்கள் பொருத்தப்பட்ட காருக்கு கின்னஸ்

Published On 2020-11-13 11:14 GMT   |   Update On 2020-11-13 11:14 GMT
துபாய் குளோபல் வில்லேஜ் கண்காட்சியில் 37,976 எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்ட காருக்கு கின்னஸ் விருது வழங்கப்பட்டு உள்ளது.


துபாயில் பல்வேறு நாடுகளின் அரங்கங்களுடன் ஒவ்வொரு ஆண்டும் குளோபல் வில்லேஜ் கண்காட்சி நடந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான கண்காட்சி அக்டோபர் மாதம் 25-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு 25 உலக சாதனைகளை படைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அந்த வகையில் காரில் 37 ஆயிரத்து 676 எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. அதற்காக கின்னஸ் சாதனை விருது கிடைத்துள்ளது. இரவு நேரத்தில் நகரம் முழுவதும் இந்த கார் தற்போது வண்ண விளக்குகளால் வைரங்கள் ஜொலிப்பது போல் ஒளிர்ந்தபடி வலம் வருகிறது. 



எல்இடி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கார் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. குளோபல் வில்லேஜ் கண்காட்சியின் தொடக்க விழாவில் நடந்த இசை நிகழ்ச்சிக்காக உலக சாதனை படைக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து இந்த கார் 2-வதாக சாதனை படைத்துள்ளது. இன்னும் 23 உலக சாதனைகள் படைக்க உள்ளதாக அந்த கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News