ஆன்மிகம்
திருவிளக்கு பூஜை செய்து பெண்கள் வழிபட்டனர். (உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்).

தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அக்னிச்சட்டி, பால்குடம் எடுக்கும் திருவிழா

Published On 2021-04-08 03:08 GMT   |   Update On 2021-04-08 03:08 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவில் நேற்று இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

விழாவில் நேற்று இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து பக்தர்கள் அக்னிச்சட்டி, பால்குடம் எடுக்கும் விழா இன்று இரவு 7 மணிக்கு மேல் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், தீச்சட்டி எடுத்து கோவிலுக்கு வருவார்கள்.

11-ந் தேதி பூப்பல்லக்கும், 12-ந் தேதி சட்டத்தேரில் மாரியம்மன் வீதி உலாவும் நடைபெறும். 13-ந் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News