செய்திகள்
காசோலை

அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த இரண்டு வங்கிகளின் காசோலைகள் செல்லாது

Published On 2021-09-09 10:53 GMT   |   Update On 2021-09-09 10:53 GMT
வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட கிளையில் இருந்து புதிய காசோலை புத்தகத்தைப் பெறலாம் அல்லது ஏடிஎம்கள், இணைய வங்கி உதவியுடன் புதிய காசோலை புத்தகங்களை கோரலாம்.
புதுடெல்லி:

ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி) மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா (யுபிஐ) ஆகிய இரண்டு வங்கிகளும், 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பஞ்சாப் நேசனல் வங்கியுடன் இணைக்கப்பட்டன, இருப்பினும் தற்போதுவரை இந்த இரண்டு பழைய வங்கிகளின் காசோலை புத்தகங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. 

இந்நிலையில், அக்டோபர் 1ம் தேதி முதல், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி) மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா (யுபிஐ) ஆகிய வங்கிகளின் பழைய காசோலை புத்தகங்கள் நிறுத்தி வைக்கப்படும் என பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) அறிவித்துளள்து.

வாடிக்கையாளர்கள் பழைய இ-ஓபிசி மற்றும் இ-யுஎன்ஐ காசோலை புத்தகத்தை, புதுப்பிக்கப்பட்ட பிஎன்பி ஐஎப்எஸ்சி மற்றும் எம்ஐசிஆருடன் கூடிய பிஎன்பி காசோலை புத்தகமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



சம்பந்தப்பட்ட கிளையில் இருந்து புதிய காசோலை புத்தகத்தைப் பெறலாம். ஏடிஎம்கள், இணைய வங்கி மற்றும் பிஎன்பி அழைப்பு மையங்களின் உதவியுடனும் புதிய காசோலை புத்தகங்களை கோரலாம்.

வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனையில் உள்ள சிரமத்தை தவிர்க்க, இனி புதுப்பிக்கப்பட்ட பிஎன்பி ஐஎப்எஸ்சி மற்றும் எம்ஐசிஆருடன் கூடிய புதிய பிஎன்பி காசோலை புத்தகத்தை மடடுமே பயன்படுத்தவேண்டும். ஏதேனும் உதவி அல்லது கூடுதல் தகவல்களுக்கு வங்கியின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-180-2222 ஐ தொடர்பு கொள்ளலாம் என பின்பி வங்கி தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News