உள்ளூர் செய்திகள்
குளித்தலை எம்.எல்.ஏ. இரா.மாணிக்கம் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேஷ்டி சேலையை பயனாளிகளுக்கு வழங்கிய காட்சி.

பொங்கல் பரிசு தொகுப்பு இலவச வேட்டி, சேலை விநியோகம்

Published On 2022-01-12 09:52 GMT   |   Update On 2022-01-12 09:52 GMT
குளித்தலை அருகே பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் பணியை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கரூர்: 

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வைகநல்லூர் அக்ரஹாரம் பகுதிகளில் தமிழக அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக பொங்களுக்காக வழங்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் வேஷ்டி சேலை வழங்கப்பட்டது.
அதன்படி பயனாளிகளுக்கு மேற்கண்டவற்றை குளித்தலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம் பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து இன்றும், நாளையும் குளித்தலை ஒன்றியத்திற்குட்பட்ட 61,269 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேஷ்டி சேலை வழங்கப்படும் என எம்.எல்.ஏ. கூறினார். 

விழாவில் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பா தேவி, தி.மு.க. மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா, சமூகநலபாதுகாப்பு வட்டாட்சியர் கலியமூர்த்தி,  முன்னாள் கவுன்சிலர் மெடிக்கல மாணிக்கம், குளித்தலை நகர துணைச் செயலாளர் செந்தில்குமார், நகர பொருளாளர் தமிழரசன், கூட்டுறவு வங்கி செயலாளர் ரமேஷ், மற்றும் கூட்டுறவு வேளாண் சங்கம் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்,
Tags:    

Similar News