செய்திகள்
ஞானதேசிகன்

தி.மு.க.வின் மோசமான விமர்சனத்துக்கு மக்கள் அளித்த தீர்ப்பு- ஞானதேசிகன் கருத்து

Published On 2019-10-26 06:27 GMT   |   Update On 2019-10-26 06:27 GMT
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி திமுகவின் மோசமான விமர்சனத்துக்கு மக்கள் அளித்த தீர்ப்பு என்று ஞானதேசிகன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

த.மா.கா. துணை தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் நாங்குநேரியிலும், விக்கிரவாண்டியிலும் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்ற பெற்றிருக்கிறார்கள். சிலர் பணபலத்தாலும் அதிகார துஷ்பிரயோகத்தாலும் இந்த வெற்றி கிடைத்திருக்கிறதென்று எப்போதும் போல் தவறான செய்திகளை பரப்ப முயற்சித்திருக்கிறார்கள்.

பணபலமும், அதிகார துஷ்பிரயோகமும் ஒரு தேர்தல் வெற்றியை தீர்மானிக்க முடியுமேயானால் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றன என்பதை எப்படி எடுத்துக்கொள்வது என்பதை தி.மு.க.வின் தலைவர் விளக்க வேண்டும்.

அந்த வெற்றியும் பண பலத்தினாலா? ஜாதிய தூண்டுதலா? சாதி அடிப்படையில் வாக்குகளை பெறுவதற்காக திடீரென்று மறைந்த முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்று அறிவித்ததை என்னவென்று சொல்வது?

2014 பாராளுமன்ற தேர்தலில் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் தனித்து தேர்தல் களம் கண்ட அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள். பாராளுமன்ற தேர்தலில் 38 இடங்கள் பெற்றோம். பாராளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாக நாங்கள் இருக்கிறோம் என்று மார் தட்டுபவர்கள். இதை ஏன் கணக்கில் கொள்ளவில்லை.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உழைத்த உழைப்பிற்கும் ஒரு முதல்-அமைச்சரை மேடை தோறும் கேவலமாக மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்ததற்கும் மக்கள் அளித்த தீர்ப்பு தான் இது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News