செய்திகள்
சீமான் (கோப்புப்படம்)

பெரிய முதலாளிகளின் மோசடியால் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி- சீமான்

Published On 2019-09-12 04:51 GMT   |   Update On 2019-09-12 04:51 GMT
பெரிய முதலாளிகள் ஏற்படுத்திய பல லட்சம் கோடி ரூபாய் மோசடியால்தான் தற்போது பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று சீமான் தெரிவித்தார்.
நத்தம்:

திண்டுக்கல் அருகே உள்ள நத்தத்தில் தனது கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்க நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது உள்ள கல்வி முறையை மாற்ற வேண்டும். கல்வி என்பது குழந்தைகள் எளிதாக படிக்கும் அளவுக்கு சுகமாக இருக்க வேண்டும். சுமையாக இருக்க கூடாது. பெரிய முதலாளிகள் ஏற்படுத்திய பல லட்சம் கோடி ரூபாய் மோசடியால்தான் தற்போது பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதுவே பிரதமர் மோடியின் 100 நாள் ஆட்சி சாதனையாக அமைந்துள்ளது. விவசாயிகளை பற்றி கவலைப்படாத தேசம் வாழ முடியாது. இந்திய அரசு விவசாயத்தை கை விட்டு தொழில் வளர்ச்சி குறித்து பேசிக்கொண்டு இருப்பது பேராபத்தில் முடியும்.

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம் குறித்து கேள்வி கேட்கும் தி.மு.க.வினர் அவர்களது ஆட்சியின் போது எத்தனை திட்டங்களுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட்டார்கள்? என்பதை தெரிவிக்க வேண்டும்.

தமிழகத்தின் ஆட்சி காலம் இன்னும் ஒரு வருடமே இருப்பதால் உள்ளாட்சி தேர்தல் வர வாய்ப்பு இல்லை. ஆனால் தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க எங்கள் கட்சி தயாராக உள்ளது. தமிழகத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் மற்றும் யூக்களிப்டஸ் மரங்களை அகற்றினால் அதிக அளவு மழை கிடைக்கும். பிளாஸ்டிக் ஒழிப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News