செய்திகள்
ரஜினிகாந்த்

தர்பார் படத்தில் சசிகலா குறித்த வசனம் - ரஜினிகாந்தை கண்டித்து அ.ம.மு.க. போஸ்டர்

Published On 2020-01-11 16:01 GMT   |   Update On 2020-01-11 16:01 GMT
வத்தலக்குண்டுவில் நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து அ.ம.மு.க. சார்பில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
வத்தலக்குண்டு:

நடிகர் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள தர்பார் படத்தில் சசிகலாவை விமர்சித்து வசனம் இடம்பெற்றுள்ளது. இது அ.ம.மு.க. தொண்டர்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது குறித்து அ.ம.மு.க. சார்பில் வக்கீல் விளக்கம் கேட்டு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முருகதாஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வத்தலக்குண்டுவில் ரஜினிகாந்தை விமர்சித்து அ.ம.மு.க. சார்பில் பல இடங்களில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

தர்பார் நடிகர் ரஜினி காந்தை கண்டிக்கிறோம். பிழைக்க வந்த இடத்தில் பிழைத்துக் கொள். வணிகத்தில் அரசியல் செய்யாதே. மதுரை விமான நிலைய சம்பவத்தை மறந்து விடாதே. திருத்திக் கொள். இல்லையெனில் திருத்தப்படுவாய். இவன் டி.டி.வி.யின் போர்ப்படை என அந்த கண்டன போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் திரைப்பட போஸ்டர் தர்பார் ஒட்டியுள்ள போஸ்டர் மீது அ.ம.மு.க. போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News