தொழில்நுட்பம்
ஆப்பிள் ஏர்பாட்ஸ்

இணையத்தில் வெளியான மூன்றாம் தலைமுறை ஆப்பிள் ஏர்பாட்ஸ் விவரங்கள்

Published On 2021-02-22 10:12 GMT   |   Update On 2021-02-22 10:12 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை ஏர்பாட்ஸ் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.


ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் மாடல் படங்கள் மற்றும் ரென்டர்கள் வெளியாகி இருக்கின்றன. முன்னதாக இதன் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ரென்டர்கள் சீனாவை சேர்ந்த வலைதளம் ஒன்றில் வெளியாகி உள்ளது.

தற்போதைய ரென்டர்களின் படி மூன்றாம் தலைமுறை ஆப்பிள் ஏர்பாட்ஸ் விலை உயர்ந்த ஏர்பாட்ஸ் ப்ரோ போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. புதிய மாடல் இன்-இயர் ரகம் கொண்டுள்ளது. இத்துடன் சிறிய ஸ்டெம் மற்றும் சிலிகான் இயர்-டிப்களை கொண்டிருக்கிறது.



புதிய ஏர்பாட்ஸ் முந்தைய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே டச் கண்ட்ரோல் வசதியை பெறும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், பிரெஷர் ரிலீப் சேம்பர் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. பேட்டரியை பொருத்தவரை புதிய ஏர்பாட்ஸ் ஐந்து மணி நேர பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கலாம்.

புதிய ஏர்பாட்ஸ் வெளியீடு பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. முந்தைய தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மார்ச் 16 ஆம் தேதி நிகழ்வு ஒன்றை நடத்த இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது உண்மையாகும் பட்சத்தில் புதிய ஏர்பாட்ஸ் இந்த நிகழ்விலேயே அறிமுகம் செய்யப்படலாம். 
Tags:    

Similar News