செய்திகள்
ஹாங் காங் போராட்டம்

யோகி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் - வைரல் பதிவுகளை நம்பலாமா?

Published On 2019-09-19 06:54 GMT   |   Update On 2019-09-19 06:54 GMT
உத்திர பிரதேச மாநில அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.




பொது வீதிகளில் பல ஆயிரம் பேர் ஒன்று கூடி போராட்டம் நடத்தும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

வைரல் புகைப்படங்கள் உத்திர பிரதேச மாநிலத்தில் எடுக்கப்பட்டதாகவும், போராட்டம் அம்மாநில அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், போராட்டம் இந்தியாவில் நடத்தப்படவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. தற்சமயம் வைரலாகும் புகைப்படங்கள் ஹாங் காங்கில் எடுக்கப்பட்டதாகும். ஹாங் காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்சமயம் வைரலாகியுள்ளன.

அந்த வகையில், வைரல் பதிவுகளில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது. போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.

Tags:    

Similar News