செய்திகள்

இலங்கையில் 2 ஐஎஸ் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- ராணுவ அதிகாரி தகவல்

Published On 2019-04-27 03:04 GMT   |   Update On 2019-04-27 03:04 GMT
இலங்கையில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலின்போது ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். #SriLankaAttacks #ISIS
கொழும்பு:

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளன்று பிரார்த்தனை நடைபெற்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர். இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சுமார் 500 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இந்நிலையில், இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அவர்களிடம் இருந்து ஐஎஸ் கொடிகள், தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள், டெட்டனேட்டர்கள் மற்றும் அவர்களின் பிரசார சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார். பொதுமக்கள் தரப்பில் ஒருவர் பலியானதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளவத்தை ரெயில் நிலையம் அருகே ஒரு கிலோ வெடிபொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #SriLankaAttacks #ISIS
Tags:    

Similar News