உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

சளி,காய்ச்சல் பாதிப்பு- அரசு ஆஸ்பத்திரிகளில் அலைமோதும் பொதுமக்கள் கூட்டம்

Published On 2022-01-09 06:59 GMT   |   Update On 2022-01-09 06:59 GMT
கடந்த ஒரு வாரமாக தலைமை அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல், சளி பாதித்து சிகிச்சை வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் தாராபுரம் ரோடு பெரிச்சிபாளையத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, மருத்துவ கல்லூரி செயல்படுகிறது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது சளி, இருமல் பாதித்து பலரும் சிகிச்சை பெற வருகின்றனர். 

கொரோனா, ஒமைக்ரான் பரவல் காரணமாக காய்ச்சல், சளி இருந்தால் மருத்துவமனைக்கு வந்து டாக்டரின் ஆலோசனைகளை பெற வேண்டும் என சுகாதாரத்துறைஅறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக தலைமை அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல், சளி பாதித்து சிகிச்சை வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 200 முதல் 300 பேர் சளி பாதிப்புடன் வருகின்றனர். 

இதனால் மொத்த புறநோயாளிகள் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1,300 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தலைமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், 

சளி, காய்ச்சல் உடல்நலக்குறைவு இருந்தால் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைக்கு வர வேண்டும் என அறிவுறுத்தியதால் பலரும் வருகின்றனர். 

இதனால் கொரோனா பாதிப்பு அதிகமாகி விட்டதாக அர்த்தமல்ல.சாதாரண சளி, காய்ச்சலுக்கு மருந்து, மாத்திரை பெற வருகின்றனர். 

மக்கள் பயப்பட வேண்டாம். தடுப்பூசி செலுத்தாதவருக்கு 24 மணி நேரம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்றார்.
Tags:    

Similar News