உள்ளூர் செய்திகள்
கழிவுநீர் ஓடைகள் அடைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு

திங்கள் நகர் பேரூராட்சியில் வீடுகளில் உள்ள கழிவுநீர் ஓடைகள் அடைக்கும் பணி

Published On 2022-05-05 08:03 GMT   |   Update On 2022-05-05 08:03 GMT
திங்கள் நகர் பேரூராட்சியில் வீடுகளில் உள்ள கழிவுநீர் ஓடைகள் அடைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மழை நீர் ஓடை களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  இதனால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் ஓடை களில் கலக்கும் கழிவுநீர் குழாய்கள் அடைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி பணியாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் கழிவுநீரை உறிஞ்சு கிணறு அமைத்து அதில் விட வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திங்க ள்நகர் தேர்வு நிலை பேரூ ராட்சியில் இந்த பணி தலை வர் சுமன் மற்றும் செயல் அலுவலர் எட்வின்ஜோஸ் ஆகியோர் மேற்பார்வையில் வார்டு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு டன் வேகமாக நடந்து வருகிறது. வீடுகள், கடை கள், ஓட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை மழை நீர் ஓடைகளில் விட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பலர் தாமாக முன்வந்து கழிவு நீர் குழாய்களை அகற்றி, அடைத்த நிலையில் சிலர் முரண்டு பிடித்தனர். இதையடுத்து மழை நீர் ஓடைகளில் கலந்த கழிவு நீர் குழாய்களை காங்கிரீட் கலவை கொண்டு பேரூர் பணியாளர்கள் அடைத்தனர். 

சிலர் கால அவகாசம் கேட்டதையடுத்து அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மழைநீர் ஓடை களில் விடப்பட்ட 450 கழிவு நீர் குழாய்கள் அடைக்கப்பட்டு உள்ளது.  11-வது வார்டு, 12-வது வார்டு பகுதிகளில் 100 சதவீத கழிவு நீர் குழாய்களும் அடைக்கப்பட்டு சுத்தம் சுகாதாரம் நிறைந்த வார்டுகளாக மாறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன் கூறும்போது, காஞ்சி ரவிளை, பண்ணியோடு ஆகிய பகுதி மக்கள் கால அவகாசம் கேட்டுள்ளனர். 
அவர்களுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. 7வது வார்டு ஆர்.சி தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் நெருக்க மாக உள்ளன.

அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப பேரூராட்சி சார்பில் உறுஞ்சுகிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் ஒதுக்கீடு செய்து வழங்கும் இடத்தில் உறுஞ்சு கிணறு அமைக்கும் பணி பேரூராட்சி சார்பில் தொடங்க உள்ளது. விரைவில் 100 சதவீதம் சாக்கடைகள் இல்லாத பேரூராட்சி என்ற இலக்கை அடைவோம் என்றார்.
Tags:    

Similar News