செய்திகள்
கோப்புப்படம்

ஒவ்வொருவருக்கும் ரூ.505 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும்

Published On 2021-11-23 10:30 GMT   |   Update On 2021-11-23 10:30 GMT
ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை நீண்ட வரிசையில் காத்து நிற்காமலும், நெரிசல் இல்லாமல் வாங்கி செல்வதற்கு வசதியாகவும் விரிவான ஏற்பாடுகளை சிவில் சப்ளை துறை செய்து வருகிறது.
சென்னை:

தமிழர் திருநாள் தை பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறக்கூடிய இந்த திட்டத்தை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அனைத்து ரே‌ஷன் கடைகள் வழியாக செயல்படுத்துகிறது.

ரே‌ஷன் கடைகள் மூலம் நெரிசல் இல்லாமல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எந்தெந்த தேதிகளில் யார்- யாருக்கு விநியோகிக்கப்படும் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இதற்கான டோக்கன்களும் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரே‌ஷன் கடைகளில் நீண்ட வரிசையில் காத்து நிற்காமலும், நெரிசல் இல்லாமல் வாங்கி செல்வதற்கு வசதியாகவும் விரிவான ஏற்பாடுகளை சிவில் சப்ளை துறை செய்து வருகிறது.

ஒவ்வொருவருக்கும் ரூ.505 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இதற்கான அரசாணையை இத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் முகமது நசிமுதின் வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

2022-ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் வழங்கலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பயனாளி ஒருவருக்கு 505 ரூபாயை அரசு செலவிடுகிறது. இதன் மூலம் ரூ.1,088 கோடியே 17 லட் சத்து 70 ஆயிரத்து 300 இத்திட்டத்துக்காக செலவிடப்படுகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள நெய் மட்டும் அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கான செலவின தொகை (ரூ.1,088 கோடி) நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெற்றுள்ள பொருட்களின் விவரம், அதன் அளவும் வருமாறு:-

1.  பச்சரிசி- 1 கிலோ
2. வெல்லம்-1 கிலோ
3. முந்திரி-50 கிராம்
4. திராட்சை-50 கிராம்
5. ஏலக்காய்-10 கிராம்
6.பாசி பருப்ழு- 500 கிராம்
7.ஆவின் நெய்-100 கிராம்
8.மஞ்சள் தூள்-100 கிராம்
9.மிளகாய் தூள்- 100 கிராம்
10. மல்லி தூள்-100 கிராம்
11. கடுகு-100 கிராம்
12. சீரகம்-100 கிராம்
13. மிளகு-50 கிராம்
14.புளி- 200 கிராம்
15. கடலை பருப்பு-250 கிராம்
16. உளுத்தம் பருப்பு- 500 கிராம்
17.ரவை- 1 கிலோ
18. கோதுமை- 1 கிலோ
19. உப்பு- 500 கிராம்
20. துணிப் பை ஒன்று இவை தவிர கரும்பு ஒன்று.
Tags:    

Similar News