செய்திகள்
தடுப்பூசி போடும் பணி

டெல்லி, கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் கொரோனா பாதிப்பு நிலவரம்

Published On 2021-06-19 13:58 GMT   |   Update On 2021-06-19 13:58 GMT
டெல்லியில் புதிதாக 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி:

நாட்டில் கொரோனா வைரசின் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்ததால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் கூட, ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவது 80 சதவீதம் வரை குறைந்துள்ளது. 

தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக புதிய தொற்று மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. நேற்று 165 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று அதைவிட குறைந்து, 135 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு விகிதம் 0.18 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 2372 பேர் சிகிச்சையில் உள்ளனர். 



கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12443 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 13,145 பேர் குணமடைந்துள்ளனர், 115 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 1,06,861 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகாவில் இன்று 5815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 11,832 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், 161 பேர் உயிரிழந்துள்ளனர். 1,30,872 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 5674 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 8014 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். 45 பேர் மரணம் அடைந்துள்ளனர். 65244 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


கோவாவில் இன்று 302 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். 419 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 96.07 சதவீதமாக உள்ளது. 3473 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிதாக 220 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 217 பேர் குணமடைந்துள்ளனர், 5 பேர் பலியாகி உள்ளனர். குணமடையும் விகிதம் 95.26 சதவீதமாக உள்ளது.
Tags:    

Similar News