செய்திகள்
கோப்புபடம்

வெள்ளகோவிலில் ரூ.34 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

Published On 2021-11-24 10:11 GMT   |   Update On 2021-11-24 10:11 GMT
நேற்று 108 விவசாயிகள் கலந்து கொண்டு 37ஆயிரத்து 68 கிலோ தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு, வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று 108விவசாயிகள் கலந்து கொண்டு 37ஆயிரத்து 068 கிலோ தேங்காய் பருப்பை  விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 

இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், கொடுமுடி, ஈரோடு பகுதியை  சேர்ந்த14 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பை  அதிகபட்சமாக ரூ.105.75க்கும், குறைந்தபட்சம் ரூ.76க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.34லட்சத்து 19ஆயிரத்து 466க்கு வணிகம் நடைபெற்றது.
Tags:    

Similar News