செய்திகள்
கோப்புப்படம்

கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

Published On 2021-07-03 08:02 GMT   |   Update On 2021-07-03 08:02 GMT
கிணற்றில் இருந்து 30 அடி ஆழ தண்ணீர் வெளியேற்றப்பட்டு தேடிய போது சிவகாமி கிணற்றுக்குள் பிணமாக கிடந்தார்.
அவினாசி

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள சென்னிமலைகவுண்டன் புதூரில் வசித்து வருபவர் அப்புசாமி (வயது72), விவசாயி. இவரது மனைவி சிவகாமி (65). இவர்களது வீட்டிற்கு அருகில் 100 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. சிவகாமி தினந்தோறும் காலையில் இந்த கிணற்றிற்கு சென்று அர்ச்சனை செய்த பூவை கொட்டுவது வழக்கம். இந்தநிலையில் இன்று காலை முதல் சிவகாமியை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்புசாமி அக்கம் பக்கத்தில் சிவகாமியை தேடி பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. கிணற்று பக்கம் சென்று பார்த்த போது கிணற்றின் அருகில் அர்ச்சனை செய்யும் கிண்ணம் மட்டும் கிடந்தது. இதனால் சிவகாமி தவறி கிணற்றிற்குள் விழுந்திருக்கலாம் என சந்தேகித்த  அப்புசாமி இதுகுறித்து உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சிவகாமியை தேடும் பணியில் ஈடுப்பட்டனர். 

மேலும் கிணற்றில்  இருந்து 30 அடி ஆழ தண்ணீர் வெளியேற்றப்பட்டு தேடிய போது சிவகாமி கிணற்றுக்குள் பிணமாக கிடந்தார்.இதையடுத்து உடலை கயிறு கட்டி மீட்டனர். 
சிவகாமி கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தாரா?  அல்லது தற்கொலை செய்தாரா? என்றுஅவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News