தொழில்நுட்பம்
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகும் ஒன்பிளஸ் 9

Published On 2021-02-20 04:17 GMT   |   Update On 2021-02-20 04:17 GMT
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 9 அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் சீரிஸ் ஆன ஒன்பிளஸ் 9 மாடல்களின் விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்சமயம் ஒன்பிளஸ் 9 விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. 

அதன்படி புதிய ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 1080x2400 பிக்சல் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், பன்ச்-ஹோல் கட்-அவுட் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படலாம்.



புதிய ஒன்பிளஸ் 9 மாடலில் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆக்சிஜன் ஒஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 11 வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 4 இல் 1 பிக்சல் பின்னிங் மூலம் 48 எம்பி ரெசல்யூஷன் வழங்கும் என கூறப்படுகிறது. 

இந்த ஸ்மார்ட்போனின் இதர சென்சார்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கான டீசர்கள் விரைவில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News