செய்திகள்
பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் திரண்ட கூட்டம்.

பொங்கல் கூட்டத்தை சமாளிக்க சென்னையில் 6 பஸ் நிலையங்கள் செயல்படத் தொடங்கியது

Published On 2020-01-12 10:58 GMT   |   Update On 2020-01-12 10:58 GMT
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னையில் 6 சிறப்பு பஸ் நிலையங்கள் செயல்பட தொடங்கியது.

சென்னை:

பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்கள் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பல லட்சம் பேர் சொந்த ஊர்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

இதற்காக பஸ், ரெயில்களில் பயணிகள் கூட் டம் அலை மோதுகிறது. பொங்கல் கூட்டத்தை சமாளிக்க தமிழக போக்கு வரத்து துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்று (12-ந்தேதி) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் 6 சிறப்பு பஸ் நிலையங்கள் இன்று முதல் செயல்பட தொடங்கியது.

கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்கறிச்சி, திருக் கோவிலூர், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோவை, எர்ணாகுளம், பெங் களூரு ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

பல லட்சம் பயணிகள் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

தாம்பரம் சானட்டோரியத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர், பஸ்கள் இயக்கப்பட்டன. தாம்பரம் மாநகர் போக்குவரத்து கழக ரெயில் நிலையத்தில் இருந்து போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி, திண்டிவணம், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய இடங் களுக்கு பஸ்கள் இயக்கப் பட்டன.

பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து காஞ்சீபுரம், ஆற்காடு ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், ஓசூர் ஆகிய ஊர் களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.

கே.கே.நகர் போக்குவரத்து பணிமனையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்த ஆந்திர மாநிலத்துக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

பொங்கல் பண்டிகையையொட்டி பயணிகள் வசதிக் காக எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டது.

Tags:    

Similar News