உள்ளூர் செய்திகள்
அய்யனார்குளத்தில் குளித்து மகிழும் பொதுமக்கள்

உடன்குடியில் குளம் சீரமைப்பு-அதிகாரிகள் பாராட்டு

Published On 2022-01-15 08:06 GMT   |   Update On 2022-01-15 08:06 GMT
உடன்குடி வட்டார பகுதியில் பொதுமக்கள் முயற்சியுடன் 6 குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வந்ததை அதிகாரிகள் பாராட்டினர்.
உடன்குடி:

உடன்குடி வட்டார பகுதியில் 7 ஏக்கரில் நரிக்குளம், 2 ஏக்கரில் வடக்கு தெருக்குளம், 2 ஏக்கரில் அய்யனார்குளம், 2 ஏக்கரில் சிறுகுளம், 2 ஏக்கரில் இடையர்குளம், 7 ஏக்கரில் மாநாட்சிகுளம் ஆகிய ஆறு குளங்களில் முழுமையாக உடை மரங்கள் மற்றும் காட்டு செடிகள் வளர்ந்து குளம் அழிந்த நிலையில் இருந்தது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்பு ஊர் கூடி ஊரணி அமைப்போம் என்ற தொண்டு நிறுவனம் உதவியுடன் உடன்குடி பகுதியில் அழிந்து போன நீர்வளத்தை மீட்க வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் பங்களிப்புடன் 6 குளங்களும் சுத்தப்படுத்தப்பட்டது.

மேலும் குளங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாய் புதுப்பிக்கப்பட்டு, தற்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தாமிரபரணி கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், மருதூர் மேலக்கால் நீர் பகிர்மான பொறியாளர் நவீன் பிரபு, தொழில்நுட்ப உதவியாளர் சுப்பையா மற்றும் அதிகாரி ரகுநாதன் ஆகியோர் 6 புதிய குளங்களையும் பார்வையிட வந்தனர்.

பொதுமக்கள் முயற்சியுடன் 6 குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வந்ததை அதிகாரிகள் பாராட்டினர்.

அதிகாரிகளை சந்தித்த விவசாயிகள், மற்றும் நீர்வளத்தை மீட்ட தொண்டு நிறுவனத்தினர் இந்த 6 குளங்களும் முழுமையாக நிரம்பும் வரை சடையநேரி கால்வாயில் தண்ணீர் விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News