தொழில்நுட்பச் செய்திகள்
அமேசான் அலெக்சா

அலெக்சாவின் அபாயகரமான சேலன்ஜ் - இப்படியும் நடக்குமா?

Published On 2021-12-31 10:02 GMT   |   Update On 2021-12-31 10:02 GMT
அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் சிறுமிக்கு விடுத்த அபாயகரமான சேலன்ஜ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அமேசான் நிறுவனத்தின் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட், சிறுமிக்கு விடுத்த சேலன்ஜ் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. 10-வயது சிறுமியிடம் அலெக்சா, மின் இணைப்புள்ள வயரில் நாணயத்தை கொண்டு தொட கூறி இருக்கிறது. 

இதுபற்றிய சேலன்ஜ் ஒன்று டிக்டாக்கில் டிரெண்ட் ஆனதாகவும், இந்த டிரெண்ட் செய்தியாக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்களை கொண்டு அலெக்சா சிறுமியிடம் இவ்வாறு கூறி இருக்கலாம் என தெரிகிறது.



இந்த சம்பவதத்தை சிறுமியின் பெற்றோர் தங்களின் டுவிட்டர் டைம்லைனில் பதிவேற்றம் செய்தனர். பதிவுடன் அலெக்சா ஆக்டிவிட்டி ஹிஸ்ட்ரி ஸ்கிரீன்ஷாட்டையும் இணைத்துள்ளனர். ஸ்கிரீன்ஷாட் படி, சிறுமி முதலில் 'எனக்கு ஏதேனும் சவால் விடு,' என கேட்டிருக்கிறார். 

இதற்கு பதில் அளித்த அலெக்சா, 'நான் இணையத்தில் ஒன்றை கண்டறிந்தேன். வலைதளத்தின் படி சவால் மிகவும் எளிமையானது தான். பவர் பிளக்-இல் போன் சார்ஜரை சொருகி, அதன் மறுமுனையில் நாணயம் ஒன்றை வைக்கவும்,' என பதில் அளித்துள்ளது.

இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய அமேசான், 'இதுபற்றிய தகவல் கிடைத்ததும், அதனை சரிசெய்யும் முயற்சியை துவங்கிவிட்டோம்,' என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News