தொழில்நுட்பம்
மாணிட்டர்

27 இன்ச் கேமிங் மாணிட்டர் அறிமுகம் செய்த சியோமி

Published On 2020-06-16 04:27 GMT   |   Update On 2020-06-16 04:27 GMT
சியோமி நிறுவனம் 27 இன்ச் அளவில் புதிய கேமிங் மாணிட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



சியோமி நிறுவனத்தின் 27 இன்ச் கேமிங் மாணிட்டர் சீன சந்தையின் கிரவுட்ஃபண்டிங் பிளாட்பார்மில் வெளியாகி உள்ளது. புதிய 27 இன்ச் மாணிட்டர் 165 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் டியுவி லோ புளூ லைட் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. 

புதிய 27 இன்ச் சியோமி மாணிட்டரை மேசையில் வைத்தும், சுவரில் பொருத்தியும் பயன்படுத்த முடியும். இதற்கான ஸ்டாண்ட் மாணிட்டருடன் வழங்கப்படுகிறது. இதனை வாடிக்கையாளர்கள் விரும்பினால் பயன்படுத்தி கொள்ளலாம். சீன சந்தையில் சியோமி 27 இன்ச் கேமிங் மாணிட்டர் விலை CNY 2199 இந்திய மதிப்பில் ரூ. 23,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



எனினும், இது கிரவுட்ஃபண்டிங் பிளாட்பார்மில் CNY 1899 இந்திய மதிப்பில் ரூ. 20,300 விலையில் கிடைக்கிறது. கிரவுட்ஃபண்டிங் சீனாவில் ஜூன் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு சியோமி மால் வலைதளத்தில் துவங்குகிறது. புதிய சியோமி மாணிட்டர் வெளியீட்டை சியோமி தனது வெய்போ அக்கவுண்ட்டில் தெரிவித்து இருக்கிறது. 

சியோமி 27 இன்ச் கேமிங் மாணிட்டர் 1440x2560 பிக்சல் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 165 ஹெர்ட்ஸ் அல்ட்ரா ஹை ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் 95 சதவீதம் டிசிஐ பி3 கலர் கேமுட் கொண்டிருக்கிறது. இது டிஸ்ப்ளே ஹெச்டிஆர் 400 டைனமிக் டிஸ்ப்ளே அம்சத்தை வழங்குகிறது. 

புதிய கேமிங் மாணிட்டரில் யுஎஸ்பி 3.0 போர்ட், டிஸ்ப்ளஏ போர்ட், ஹெச்டிஎம்ஐ போர்ட் மற்றும் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News