தொழில்நுட்பம்
சாம்சங் டீசர்

விரைவில் இந்தியா வரும் புது சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்

Published On 2021-09-15 16:31 GMT   |   Update On 2021-09-15 16:31 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.


சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 19 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என அறிவித்துள்ளது. புதிய எம் சீரிஸ் ல்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கிறது.

புதிய கேலக்ஸி எம்52 5ஜி மாடல் முந்தைய எம்51 மாடலை விட 21 சதவீதம் மெல்லியதாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 11 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும் என தெரிகிறது. இத்துடன் பிளாஸ்டிக் பேக், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.



புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம். இத்துடன் சாம்சங் பே, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது. 

Tags:    

Similar News