தொழில்நுட்பச் செய்திகள்
வாட்ஸ்ஆப்

இந்திய வாட்ஸ்ஆப் பயனர்களை குறிவைத்து திட்டம்.. வெளியான எச்சரிக்கை

Published On 2022-03-17 06:35 GMT   |   Update On 2022-03-17 06:35 GMT
24 மணி நேரத்தில் 3 பேர் வரை இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வாட்ஸ்ஆப் பயனர்களை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இந்தியாவில் வெளியாகியுள்ள காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படத்தின் இலவச இணைப்பு சைபர் குற்றவாளிகள் மூலம் வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்படுகிறது. அதை கிளிக் செய்பவர்களுடைய போன் மால்வேர் மற்றும் பிற வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் நொய்டா உள்ளிட்ட சில நகரங்களில் வாட்ஸ்ஆப்பில் வந்த இலவச இணைப்பை கிளிக் செய்து பலர் பணத்தை இழந்துள்ளதாக புகார்களும் எழுந்துள்ளன. 24 மணி நேரத்தில் 3 பேர் இந்த மோசடியில் சிக்கி ரூ.30 லட்சம் வரை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர்குற்றவாளிகளால் அனுப்பப்படும் மால்வேர் வங்கி கணக்குகளை ஹேக் செய்து தொகைகளை திருடி வருவதாகவும், வாட்ஸ்ஆப் மூலம் ஏதாவது லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.
Tags:    

Similar News