வழிபாடு
கருமன்கூடலில் இருந்து யானை மீது சந்தனகுட ஊர்வலம் வந்தபோது எடுத்தபடம்.

நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலுக்கு யானை மீது சந்தனகுட ஊர்வலம்

Published On 2022-03-29 07:13 GMT   |   Update On 2022-03-29 07:13 GMT
நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலுக்கு யானை மீது சந்தனகுட ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மண்டைக்காடு அருகே உள்ள நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் 9-ம் நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறப்பு, திருப்பள்ளி உணர்த்தல், தீபாராதனை, புஷ்பாபிஷேகம், சிறப்பு பூஜை, அன்னதானம் ஆகியவை நடந்தது.

தொடர்ந்து கருமன்கூடல் அய்யா வைகுண்டசாமி நிழல்தாங்கலில் இருந்து சமய வகுப்பு மாணவ-மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்ற யானை மீது சந்தனகுடம் ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்தை நிழல்தாங்கல் நிர்வாகி கிருஷ்ணானந்தம் தொடங்கி வைத்தார். இதில் தலைவர் சுந்தரபாலன், செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் சிவராஜ், அமைப்பாளர் முருகன், நிர்வாக குழு உறுப்பினர்கள் நீலகண்டன் நாடார், குமரேசன், சடையன், நாகராஜன், செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ், தங்கத்துரை, ஜெகன், சுரேஷ் ராமன் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலமானது சிங்காரி மேளத்துடன் புறப்பட்டு கருமன்கூடல், லெட்சுமிபுரம், பருத்திவிளை, மண்டைக்காடு, மணலிவிளை வழியாக கோவிலை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.

விழாவின் 10-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, பள்ளி உணர்த்தல், தீபாராதனை, காலை 7 மணிக்கு கடலுக்கு சென்று நீராடி புனிதநீர் எடுத்து வருதல், மதியம் 2.30 மணிக்கு கருமன்கூடல் தொழில் அதிபர் கல்யாணசுந்தரம் உபயமாக வழங்கும் சிலம்பாட்டம், இரவு 7 மணிக்கு போட்டிகளில் வெற்றி பெற்ற சமய வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து 10 மணிக்கு கொடை சிறப்பு பூஜை, 11 மணிக்கு கொடைவிழா, நள்ளிரவு 2 மணிக்கு ஒடுக்கு பூஜை ஆகியவை நடக்கிறது.
Tags:    

Similar News