செய்திகள்
அர்ஜூன் சம்பத் - ரஜினிகாந்த்

கட்சி தொடங்குவது பற்றி ரஜினிகாந்த் நல்ல முடிவு எடுப்பார் - அர்ஜூன் சம்பத்

Published On 2020-11-30 07:41 GMT   |   Update On 2020-11-30 07:41 GMT
கட்சி தொடங்குவது பற்றி ரஜினிகாந்த் நல்ல முடிவு எடுப்பார் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
கோவை:

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மும்மொழி கொள்கை குறித்து நேதாஜி மாணவர் படையினருடன் கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சி தொடங்குவது குறித்து அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று கருதுகிறேன். தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ரஜினி தொடங்கும் கட்சி, மாற்றத்தை விரும்பும் மக்களுக்கானதாக இருக்கும். ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி முழு ஆதரவை தரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News