செய்திகள்
மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை - மத்திய மந்திரி இன்று தொடங்கி வைக்கிறார்

Published On 2021-01-24 21:44 GMT   |   Update On 2021-01-24 21:44 GMT
வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை இன்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைக்கிறார்.
புதுடெல்லி:

இந்தியாவில் தேர்தல் கமிஷன் 1950-ம் ஆண்டு, ஜனவரி 25-ந் தேதி உதயமானது. இதன் ஆண்டு விழாவையொட்டி வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை இன்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைக்கிறார்.

இதுபற்றி தேர்தல் கமிஷன் விடுத்துள்ள அறிக்கையில், மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் மின்னணு புகைப்பட அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, 5 புதிய வாக்காளர்களுக்கு அவர் அவற்றை வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது ஆதார் அடையாள அட்டை, பான் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவை மின்னணு வடிவில் கிடைத்து வந்தது. இப்போது அந்த வரிசையில் வாக்காளர் அடையாள அட்டையும் சேருகிறது.

புதிய வாக்காளர்கள் இந்த மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை தங்களது செல்போனில் அல்லது கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
Tags:    

Similar News