ஆட்டோமொபைல்
ஜீப் ராங்லர்

2021 ஜீப் ராங்லர் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

Published On 2021-02-18 09:05 GMT   |   Update On 2021-02-18 09:05 GMT
ஜீப் நிறுவனத்தின் 2021 ராங்லர் மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


ஜீப் இந்தியா நிறுவனம் 2021 ராங்லர் மாடலை மார்ச் 15 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. தற்சமயம் ராங்லர் மாடல் சிபியு முறையில் இந்தியாவில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 63.94 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

சமீபத்தில் ஜீப் நிறுவனம் தனது ராங்லர் மற்றும் கிராண்ட் செரோக்கி மாடல்களை இந்தியாவில் உள்ள ரங்கூன் ஆலையில் உற்பத்தி செய்வதாக அறிவித்தது. அந்த வகையில் புதிய ராங்லர் சிகேடி வகையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



புதிய ராங்லர் மாடல் ஐந்து கதவு கொண்டிருக்கும் என்றும், 18-இன்ச் அலாய் வீல்கள், ஏழு-ஸ்லாட்கள் கொண்ட கிரில், டிராப்-டவுன் விண்ட்ஷீல்டு மற்றும் கழற்றக்கூடிய கதவுகள் மற்றும் ரூப் வழங்கப்படும் என தெரிகிறது. உள்புறம் மேம்பட்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், மேம்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்டீரியோ சிஸ்டம், கழுவக்கூடிய இன்டீரியர்கள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

ராங்லர் என்பதால் இது சிறப்பான ஆப்-ரோடு திறன், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கும். புதிய மாடலிலும் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மோட்டார், 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 268 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
Tags:    

Similar News