உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தாராபுரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

Published On 2021-12-03 04:54 GMT   |   Update On 2021-12-03 04:54 GMT
முகாமில் 121 தொழில் நிறுவனங்களும், 3,378 பேரும் கலந்து கொண்டனர். மேலும் திறன் பயிற்சியை நிறைவு செய்த 120 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தாராபுரம்:

தாராபுரம் மகாராணி கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியன சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். 

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் முகாமை தொடங்கி வைத்து தேர்வு செய்யப்பட்ட 793 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முகாமில் 121 தொழில் நிறுவனங்களும், 3,378 பேரும் கலந்துகொண்டனர். 

மேலும் திறன் பயிற்சியை நிறைவு செய்த 120 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 52 பேர் கடனுதவி கோரியுள்ளனர். மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலம் 650 பேரும் முன்னோடி வங்கி மூலம் 340 பேரும் பதிவு செய்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ஞானசேகரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ், மகளிர் திட்ட அலுவலர் மதுமதி, மகாராணி கல்வி அறக்கட்டளை செயலாளர் சுலைமான், கல்லூரி முதல்வர் தமிழ்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News